2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி பருத்தித்துறை கடலில் கடலட்டை பிடித்த அறுவருக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் இன்று வியாழக்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

பருத்தித்துறைக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் 2 டிங்கி படகில் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த இந்த அறுவரையும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் புதன்கிழமை (05) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்;ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X