Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதால் மலக்கழிவுகளை அகற்றுவதில் சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட செயலகத்தால் சாவகச்சேரி நகரசபை, சுன்னாகம் மற்றும் கரவெட்டி பிரதேச சபைகளும் மலச்சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இம்மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் அமைப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு ஒப்பந்தத்தை மாவட்ட செயலகம் நேரடியாக கேள்வி கோரி சுமார் 75 மில்லியன் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரரிடம் வழங்கியிருந்தது.
இதில் சாவகச்சேரியில் அமைக்கப்படுகின்ற மலச்சுத்திகரிப்பு நிலையம் சுமார் 24 மில்லியன் ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகத்தின் நேரடி கண்காணிப்புடன் இடம்பெற்று வந்துள்ளது.
கட்டுமானப்பணிகள் 50 வீதம் நிறைவடைந்த நிலையிலும் அங்கு பொருத்தப்படவிருந்த இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையிலும் அந்த பணிகள் திடீரென கைவிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி கட்டிடப்பணிகள் தரமற்றதாகவும் திருப்திகரமற்றதாகவும் இருந்தது. இக்கட்டிட பணிகளின் நிலை தொடர்பாக திருப்திகரமற்றதாக உள்ளது என சாவகச்சேரி நகராட்சிமன்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரால் மாவட்ட செயலகத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சாவகச்சேரி நகராட்சி மன்றம் முன்னெடுத்து வந்த மலக்கழிவு அகற்றும் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பாக சாவகச்சேரி நகராட்சி மன்ற தலைவர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவிக்கையில்,
கடந்த 2016 க்கு முற்பட்ட காலப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுகின்ற பகுதியில் பாரிய குழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் மலக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளன.
அதன்பின் மலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணிகள் ஆரம்பித்ததன் பின்னர் நகராட்சி மன்றத்தால் மலக்கழிவு கொட்ட இடம் இல்லாததால் அந்தப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது.
இதனால் தனியார் மலக்கழிவு அகற்றும் நிறுவனங்கள் எமது பகுதியில் உள்ள மலக்கழிவுகளை அகற்றுகின்றன. இதற்கு மக்கள் அதிக பணம் வழங்கவேண்டியுள்ளது.
நான் நகராட்சி மன்ற தவிசாளராகிய பின் மலச்சுத்திகரிப்பு நிலைய பணிகளை பூரணப்படுத்தி வழங்குமாறு மாவட்ட செயலகத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும் இந்த மலச்சுத்திகரிப்பு நிலையம் பூரணப்படுத்தப்பட்டு இயங்க ஆரம்பித்தால் நகராட்சி மன்றம் வருமானத்தை பெற்றுக்கொள்வது மட்டுமின்றி 6 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பினையும் வழங்க முடியும் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.
இவ்விடயங்கள் தொடர்பாக நகராட்சி மன்ற வரியிறுப்பாளர் ஒருவர் கூறுகையில்,
கடந்த 2 வருடமாக நகரசபை மலக்கழிவுகளை அகற்றுகின்ற பணிகளை நிறுத்தியுள்ளது. இதனால் குடியிருப்பாளர்களாகிய நாம் மழைகாலங்களில் அதிக பாதிப்புக்ளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமின்றி நகராட்சி மன்றம் மலக்கழிவுகளை அகற்றுவதற்கு 6 ஆயிரம் ரூபாவை செலுத்தினோம். ஆனால் தனியார் நிறுவனங்கள் அகற்றுவதற்கு 12 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago