2025 மே 07, புதன்கிழமை

கணவருடன் சென்ற மனைவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி  , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சுன்னாகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு, தனது கணவனுடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது,  , திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இதையடுத்த, அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X