Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மார்ச் 11 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரபல தேசிய பாடசாலையொன்றில் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் சிலர், 11ஆம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் இருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தரம் 11 மாணவர்களிடம் உயர்தர மாணவர்கள் கப்பமாக பணம் தருமாறு கோரியதாகவும், அதனை அவர்கள் கொடுக்க மறுத்தமையால், தரம் 11 மாணவர்களின் வகுப்பறைக்குள் கடந்த 9ஆம் திகதி புகுந்து உயர்தர மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, தாக்குதல் மேற்கொண்ட உயர்தர மாணவர்களில் ஒருவர் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த உயர்தர மாணவனை இடைநிறுத்தியதைத் தொடர்ந்தே, மேற்படி பாடசாலை அதிபரின் கார் கண்ணாடியும் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago