Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கரவெட்டி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம், இன்று (28), சபையின் தவிசாளார் தங்கவேலாயுதம் ஐங்கரனால் முன்மொழியப்பட்டது.
150.6 மில்லியன் ரூபாய் எதிர்பார்க்கப்படும் வருமானாக காட்டப்பட்டுள்ளது. செலவு திட்டத்தில் வீதி அமைப்புக்கு 20 மில்லியன் ரூபாயும், வீதி அபிவிருத்திக்கு 35 மில்லியன் ரூபாயும், வீதி பராமரிப்பு, வாகனங்கள் கொள்வனவு செய்ய 40 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
ஈ.பி.டி.பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை.
சமூகமளித்த 21 உறுப்பினர்களும் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதனால் சபையின் ஏகமனதாக வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .