2025 மே 05, திங்கட்கிழமை

கரைச்சி பிரதேச சபை பட்ஜெட் வெற்றி

Princiya Dixci   / 2020 நவம்பர் 19 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என் நிபோஜன், சுப்ரமணியம் பாஸ்கரன்

கரைச்சி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்), பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று (19) காலை 9.45 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்ட போது, 7 மேலதிக வாக்குகளால் பட்ஜெட் வெற்றிபெற்றுள்ளது. 

இதன்போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் நேற்றைய சபையில் கலந்துகொண்டிருக்கவில்லை.

ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர். 

எதிராக சுயேட்சைக்குழு உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X