2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கற்கோவளத்தில் தம்பதி கொலை

Janu   / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த, சலவைத் தொழிலில் ஈடுபட்டுவரும் 53 வயதுடைய மாணிக்கம்  சுப்பிரமணியம்  மற்றும் அவரது மனைவியான 54 வயதுடைய  மேரி  ஆகிய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தகவல் தெரிவித்துள்ளதுடன் இரு சடலங்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்,எஸ் தில்லைநாதன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X