Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 14 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், கோடரியால் கொத்தி நேற்று முன்தினம் (13) கொலை செய்யப்பட்டார்.
வாசுதேவன் அமல்கரன் என்ற அவ்விளைஞர், அவரது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று இரவு, தனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில், நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு வந்த அலைபேசி அழைப்பை அடுத்து, அலைபேசியில் உரையாடிக்கொண்டே சற்று தூரம் நடந்து சென்றுகொண்டிருந்த போதே, ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளாரென, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தலைமறைவாகி உள்ளதால், இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன், கோடரியால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார் என்றும், சடலம் தற்போது, பிரேத பரிசோதனைக்காக, யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய பருத்தித்துறை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .