2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரின் கல்விக்குரல் அமைப்பினால், மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(24) காலை, மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

மன்னாரின் கல்விக்குரல் அமைப்பின் தலைவர் எஸ்.என்.டிலான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், கௌரவ விருந்தினர்களாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்-பத்திமா மகா வித்தியாலய பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ், மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை அதிபர் ரி.தனேஸ்வரன், மன்-புனித வளனார் பாடசாலை அதிபர் ராதா லெம்பேட், மடு சுகாதார வைத்திய அதிபாரி வைத்தியர் ஒஸ்மன் டெனி, மன்னார் கல்விக்குரல் அமைப்பின் ஆலோசகர் யூட் பிகிராடோ, சித்த மருத்துவ நிபுணர்  வைத்தியர் எஸ்.லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X