2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கல் அகழ்ந்த பெக்கோ வாகனங்கள் தடுத்து வைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் வாகையடி, மற்றும் குட்டியப்புலம் பகுதிகளில் அனுமதிபத்திரம் இன்றி கல் அகழ்வுக்கு பயன்படுத்திய பெக்கோ வாகனம் மூன்று, உழவு இயந்திரம் என்பவற்றை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர்.

கனியவளங்கள் மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதிபத்திரம் இன்றி, சுண்ணாம்பு கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலே இவை பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் உள்ள காணி உரிமையாளர்கள், கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கினாலும் பெக்கோ வாகனங்கள் மூலம் கல் அகழ்வதற்கு கனியவளங்கள் மற்றும் சுரங்கப்பணியகத்திடம் அனுமதி பெறவேண்டும் என பொலிஸார் கூறினர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் ஒன்று, இதே குற்றத்துக்காக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதே பெக்கோ வாகனம் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிபத்திரம் இன்றி கல் ஏற்றி வந்த உழவு இயந்திரம், வசாவிளான் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X