2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கல் எறிந்த மூவர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொழும்புத்துறை - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் மீது , கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்ட மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (19) காலை 9 மணிக்கு, கொழும்புத்துறையிலிருந்து யாழ். நகரத்துக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் மீது, பாசையூர் அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக வைத்து கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில், பஸ்ஸின் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், பஸ்ஸில் பயணித்த இரு பயணிகளுக்கு காயங்களும் ஏற்பட்டது.

பஸ்ஸை சிலர் அடாவடியாக மறிக்க முற்பட்ட போது, பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் செலுத்தி சென்றதையடுத்து, பஸ் மீது அவர்கள் கல் வீசியுள்ளனர்.

இது தொடர்பில், பஸ் சாரதி, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பாசையூர் பகுதியைச சேர்;ந்த மூவரை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X