2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கலாசார அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு

Sudharshini   / 2016 மார்ச் 12 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

கலாசார அதிகார சபையின் தலைவராக பிரதேச செயலரும் செயலாளராக தி.ம.நெல்சனும், பொருளாளராக போல் கலிஸ்ரனும், பிரதித்தலைவராக இரா.செல்வடிவேலும், பிரதிச் செயலாளர் கு.இராயப்பு ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

பிரதேச செயலகத்துக்குட்பட்ட 28 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 28 உறுப்பினர்களும், மதத்தலைவர்கள் மூவரும் சகல கலாசார செயற்பாடுகளுக்கும் பொறுப்பாக செயற்படவுள்ளனர்.

ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் சமய, கலாசார விழுமியங்களையும் முன்னைய கலை, கலாசாரங்களையும் உணவு வகைகளின் தயாரிப்புக்களையும் முன்னெடுப்புக்களையும் மேம்படுத்தும் பணியில் இந்தக் குழு ஈடுபடவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X