2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கலாசார மத்திய நிலைய கட்டடப் பணிகள் ஆரம்பம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இந்திய அரசாங்கத்தின் 1.7 பில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்க தீர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது. இதனால், புல்லுக்குளத்துக்கு அருகிலுள்ள வீதி மூடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர் இந்த வீதியானது தனியாக நடைபாதை வீதியாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

600 பேர்களை உள்ளடக்கக்கூடிய கேட்போர்கூடம், ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய பல்லூடக நூலகம், கண்காட்சி கலைக்காட்சிக் கூடங்கள், அருங்காட்சியகம், சங்கீதம், நடனம், இசைக்கருவிகள், மொழி போன்ற கலை அம்சங்களை நடத்துவதற்கான வகுப்பறை, மொழி ஆய்வுகூடம் மற்றும் கேட்போர் கூடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்த கலாசார மத்திய நிலையம் அமையவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், அது தொடர்பான வரலாற்றுச் சாதனைகளையும் நிலை நாட்டுவதற்கும், இலங்கை - இந்திய கலாசார உறவை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X