2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கலைப்பீட பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம்?

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு இறுதிப்பரீட்சைகளை திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை (25) நடாத்துவதற்கான சகல நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக யாழ். பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனான சந்திப்பொன்றை வெள்ளிக்கிழமை (22) மேற்கொண்டதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

கடந்த 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தபட்டன.

மருத்துவம், சித்தமருத்துவம், விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் கலைப்பீட மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு இறுதிப்பரீட்சைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (25) நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதனை நிறுத்தாமல் நடத்துவதற்கான நடவடிக்கையினை நிர்வாகம் மேற்கொள்கிறது.

இதன் இறுதி முடிவு சனிக்கிழமை (23) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இருந்தும் அதிகளவில் பரீட்சைகள் ஆரம்பிக்க சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X