2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ், தமிழ் பாடசாலைகள்

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கையிலுள்ள தமிழ் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகள் என்பவற்றை கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.எஸ்.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியில் மொழிக் கற்கை கூடம் நேற்று வியாழக்கிழமை (10) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதற்கான நடவடிக்கைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் இடம்பெற்று வருகின்றன. இதன்மூலம் தமிழ்  பேசும் மாணவர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை தங்கள் சொந்த மொழியில் அமைச்சுக்கு தெரிவித்து, தீர்வுகளைக் காண முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .