2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கள்ளு விற்ற 9 பேருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.அரசரட்ணம்

வட்டுக்கோட்டை, அராலி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் வைத்து கள்ளு விற்பனை செய்தவர்களுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் 45,000 ரூபாய் அபராதம், நேற்று புதன்கிழமை (28) விதிக்கப்பட்டுள்ளதாக சங்கானை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம் மேற்படி பிரதேசங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அனுமதிப்பத்திரமின்றி கள்ளு விற்பனை செய்த 8 பேரும் மேலதிகமாக கள்ளு வைத்திருந்த ஒருவரும் பிடிக்கப்பட்டனர்.

இதில் அனுமதிப்பத்திரமின்றி கள்ளு விற்பனை செய்த 7 பேருக்கு தலா 5,000 ரூபாய்ப்படியும் அதே குற்றச்சாட்டை முன்னரும் செய்திருந்தமைக்காக ஒருவருக்கு 7,000 ரூபாயும், மேலதிகமாக கள்ளு வைத்திருந்த நபருக்கு 3,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .