Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 17 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
யாழ்ப்பாணம் அல்-ஹதீஜா மகளிர் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தங்கியிருக்கும் தங்களை மாற்று இடமொன்று வழங்காமல் அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கூறியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
1990ஆம் ஆண்டு ஹதீஜா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பெண்களுக்கான தனியான பாடசாலையின் அவசியம் இருப்பதால் இப்பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறித்த பாடசாலையை புனரமைக்க வேண்டியிருப்பதால் பாடசாலையில் தங்கியிருக்கும் அனைவரும் வெளியேறுமாறு யாழ். மாவட்ட பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் பாடசாலையில் தங்கியிருக்கும் 13 குடும்பங்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அந்தப் பாடசாலையில் தங்கியிருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
7 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Oct 2025
01 Oct 2025