2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கவிஞர் தாகூரின் நினைவு பேருரை

George   / 2016 ஜூலை 06 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரபல கவிஞரும், எழுத்தாளரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான குருதேவ் இரவீந்திரநாத் தாகூரின் நினைவு தின சிறப்பு பேருரை ஒன்றை எதிர்வரும் சனிக்கிழமை 9 காலை 9.30 மணிக்கு யாழ். மருத்துவபீட வளாகத்தில் அமைந்துள்ள ஹுவர் அரங்கில் நடாத்த இந்தியத்துணைத்தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

1922, 1928 மற்றும்1934ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டமை மற்றும் அவரது 155ஆவது பிறந்த தின நினைவு நாளை கொண்டாடும் முகமாக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தினருடன் இணைந்து இந்தியத்துணைத்தூதரகம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

நினைவுப் பேருரையை இந்தியாவில் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள, விஸ்வபாரதி (சாந்திநிகேதன்) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுவபன்குமார் தத்தா வழங்குவார். 

விஸ்வபாரதி, குருதேவ் இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் 1921இல் உருவாக்கப்பட்டு, 1951 இல் இந்தியப் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவின் குடியரசுத்தலைவரை சகல அதிகாரங்களையும் கொண்ட வருகையாளராகவும்  இந்தியப் பிரதமரை வேந்தராகவும், மேற்கு வங்க ஆளுநரை முதல்வராகவும் கொண்டுள்ள சிறப்புக்களை கொண்டது விஸ்வபாரதி. 

இதன் துணைவேந்தரை இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்கள் நியமிப்பார். பேராசிரியர் சுவபன்குமார் தத்தா அவர்கள் இந்தியாவின் தாவர உயிரியல் தொழில்நுட்பதுறையில் பிரபல விஞ்ஞானியுமாவார். 

இவர் அனைத்து அறிவியல் துறைசார்ந்த 25 இந்திய விஞ்ஞானிகளில் முக்கிய இடத்தை வகிப்பவராவார். கலாநிதி தத்தா, இந்திய இயற்கை அறிவியல் ஆய்வாளராகவும், உலக அறிவியல் மைய ஆய்வாளராகவும் விளங்குகின்றார். பேராசிரியர் சுவபன்குமார் தத்தா, இந்திய அரசாங்கத்தின் விவசாய ஆராய்ச்சிக்கான இந்தியப் பேரவையின் துணை இயக்குனர் நாயகமாக முன்னர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X