2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த 27ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போனவர்களில்,  இளைஞன் ஒருவரின் சடலம், ஆழியவளை கடற் பகுதியில் இன்று (31) நண்பகல் கரையொதுங்கியுள்ளது.

வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிறேம்குமார் மற்றும் அவரின் சகோதரியின் மகனான 21 வயதான தணிகைமாறன் ஆகிய இருவரே காணாமல் போயிருந்தனர்.

இவர்களை, அப்பகுதி மீனவர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினர்  இணைந்து கடற்பரப்பில் இரவு, பகலாக தேடி வந்தனர். எனினும், அவர்களையோ, அவர்கள் பயணித்த படகையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அறுந்த வலைகள் மட்டும் மீட்கப்பட்டிருந்தன.

அவர்களின் படகை இந்திய ரோலர் படகுகள் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இன்று (31) நண்பகல் தணிகைமாறன் என்பவருடைய சடலம், ஆழியவளை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றவர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்தும் தேடுதல் நடைபெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .