Editorial / 2024 மார்ச் 26 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (26) காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தையும் இடைமறித்தனர்.
காணி உரிமையாளர்களின் நீண்ட நேர எதிர்ப்பினை அடுத்து காணியினை அளவீடு செய்வதற்கு தமக்கு விருப்பம் இல்லை என காணி உரிமையாளர்கள் கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கியதை அடுத்து நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

குறித்த பகுதியில் அதிகமான பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின்கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான், புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளில் 12.0399 கெக்டேயர் ( 29 ஏக்கர் 3 றூட் 0.20 பேர்ச் ) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

6 hours ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
05 Nov 2025