2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

குமுதினி படுகொலையின் 37ஆவது நினைவேந்தல்

Freelancer   / 2022 மே 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

குமுதினி படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆத்மார்த்தமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு - குறிகாட்டுவானுற்கும் இடையே பயணம் செய்த 64 பயணிகளை உள்ளடக்கிய குமுதினிப் படகு வழிமறிக்கப்பட்டு,  குறித்த படகில் பயணித்த  சிறுபிள்ளை முதல் 36 பேர் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் முகமாக யாழ். பல்கலைக்கழகத்தில்   படுகொலை நினைவேந்தல்   மாணவர்களால் அறிவிக்கப்பட்டதோடு, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு உரிய நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை அவர்களுக்குரிய நீதி கிடைக்கவேண்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் வலியுறுத்தப்பட்டது.   (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X