2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

குருநகர் – கொழும்புத்துறை விபத்து: சிகிச்சைப் பெற்றவர் பலி

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

குருநகர் - கொழும்புத்துறை பிரதான வீதியில், நவம்பர் 5ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர், இன்று (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், சுண்டிக்குளி பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மகிந்தன் (வயது 37) என, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும் அவரது நண்பரும் பயணித்த ஓட்டோவொன்று, குருநகர் சுற்றுவட்ட பாதையில், எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்குளானது.

இதன்போது, மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X