Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர், இந்தியாவுக்குச் சென்று, தங்களைக் குறை கூறி, அவருக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா என வினவிய வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லையெனவும் கூறினார்.
வடமாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து கூறினார். இது குறித்து பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், என்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில், ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லையெனவும் முதலாவது, வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது எனவும் வினவினார்.
“அதன் பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது. அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன; தாமதம் அடைந்தன” எனவும் அவர் கூறினார்.
“நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது” எனவும், தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago