Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை மீட்பதற்காக, நிலமீட்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் முள்ளியவளை பொலிஸாருக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை மீட்பதற்காக, நிலமீட்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் (04) இடம்பெற்ற நிலையில், கேப்பாபுலவு மக்கள், சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் எனத் தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முற்பட்ட வேளையில், குறித்த இடத்துக்கு வந்த முள்ளியவளை பொலிஸார் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
18 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
54 minute ago
1 hours ago