Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 31 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் இரட்ண ஜீவன் கூல் கூறுவாராயின், அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு, தன்னுடைய சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து கூலை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் மணிவண்ணண் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டவிதிகளை மீறி மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் தேர்தல் பிரச்சாரம் நடாத்தியதாக கூறி தொடரப்பட்ட வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்றது.
இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரட்ண ஜீவன் கூல், தேர்தல் திணைக்கள அதிகாரியாக இருந்து கொண்டே நீதித்துறையை அவமதிக்கின்ற வகையிலும் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்புகின்ற வகையிலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார். குறிப்பாக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், நான் போட்டியிடும் கட்சிக்கு வாக்களிக்க கூடாதென்று தெரிவித்திருந்தார்.
நடுநிலையாகச் செயற்பட வேண்டிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் வாக்களிக்க கூடாதென்று கூறுவாரானால், அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்பதையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும்.
அவரின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி, தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கும் நாங்கள் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றோம். இவ்வாறு மக்களை பிழையாக வழிநடாத்துகின்ற அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
24 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago