2025 மே 05, திங்கட்கிழமை

கொரோனா நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என் நிபோஜன் 

யாழ்ப்பாணம் - மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு - முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களை கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி - கிருஸ்ணபுரத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட தொற்று  நோயியல் வைத்தியசாலைக்கு, இன்று (29) இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேரும் முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேருமாக 40 பேர் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். 

கிருஸ்ணபுரம் பகுதியில் சகல வசதிகளுடன் 200 பேர் சிகிச்சை பெறும் வகையில் வைத்தியசாலை அமைக்கப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அதி நவீன கண்காணிப்புக் கமெராக்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தின் பாதுகாப்பும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. 

கிருஸ்ணபுரம் வைத்தியசாலையே வட மாகாணத்துக்கான தொற்று நோயியல் வைத்தியசாலையாக இயங்கவுள்ளது.

இதேவேளை, மருதங்கேணி  வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அங்கு மழைக்காலத்தில்  மலசலகூட வசதிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மூடப்படுவதாகவும் மருதங்கேணி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரிதொரு இடத்தில் இடம்பெற்று வந்த நிலையில், வழமை போன்று வைத்தியசாலை செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X