2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளையடித்த பணத்தில் பொம்மை வாங்கிய நால்வர் கைது

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன், மனைவி உட்பட நால்வர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இருபாலை பகுதியில், கடந்த 15ஆம் திகதி இரவு, வீடு புகுந்த இருவர், 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த வீட்டுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை பரிசோதனை செய்ததன் அடிப்படையில், அரியாலை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை யாழ். நகர் பகுதியில் வைத்து இன்று (20) காலை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விற்ற பணத்தில் கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக நிலையத்துக்கு சென்று சிறுவர்களுக்கான பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் உடுபுடவைகள் என சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கொள்வனவு செய்துள்ளார்கள். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 5 பவுணை உருக்கி தங்க கட்டிகள் ஆகியுள்ளனர். மேலும், 96 ஆயிரத்து 190 ரூபாய் பணத்தை ரொக்க பணமாகவும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர்.

அத்துடன் கொள்ளை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் மனைவி, குறித்த கொள்ளை சம்பவத்துக்க உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி தங்க கட்டியாக்கி கொடுத்த குற்றச்சாட்டில் யாழ்.நகர் பகுதியை சேர்ந்த நகை தொழிலாளி ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X