2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொள்ளை; இராணுவ வீரர் உட்பட இருவருக்கு மறியல்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன், எம்.றொசாந்த்

 

இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும், செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்றம், நேற்று (17) உத்தரவிட்டது.

இணுவிலில் உள்ள வீடொன்றினுள், ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 1 மணியளவில் ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பலொன்று, முகங்களை கறுப்பு துணிகளால் கட்டி, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்து, வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்த மடிக்கணினி, 4 அலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார், புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இராணுவ வீரரொருவரையும்

கொள்ளையிடப்பட்ட பொருள்களை உடமையில் வைத்திருந்தவரின் மனைவியும் கைதுசெய்யப்பட்டனர்.

அத்துடன், கொள்ளையிடப்பட்ட பொருள்களை உடமையில் வைத்திருந்தவர் தலை​மறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .