Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த்
“கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் கட்டளை பெற்றுள்ளார். இனி ஒரு சந்தர்ப்பத்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால், அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும். அவரது சாட்சியம், லலித், குகன் வழக்கில் முக்கியமானது” என, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.
எனினும் அந்த விண்ணப்பத்தை நிராகரித்த மன்று, வழக்கின் அடுத்த சாட்சியாக டயலொக் நிறுவனத்தின் பிரதிநிதியை மன்றில் முன்னலையாகுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் ஒக்டோபர் 31 வரை ஒத்திவைத்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு, நேற்று, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி அமரசிங்க முற்பட்டார்.
சாட்சிக்கு வழங்கப்பட்ட அழைப்புக் கட்டளைக்கு இடைக்காலத் தடை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டு அந்தக் கட்டளையின் சான்றுப்படுத்திய பிரதியை மன்றில் முன்வைத்தார்.
“லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியம் மிகமுக்கியமானது. எனினும் அவர் இந்த மன்றில் முன்னிலையாவார் என்று கடந்த இரண்டு தவணைகளில் அவரது சட்டத்தரணிகள் உறுதியளித்துள்ளனர்.
“தற்போது அவர் இந்த மன்றில் முன்னிலையாவதற்கு பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்று கட்டளை பெற்றுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகவோ, ஜனாதிபதியாகவோ இருந்தால்கூட இந்த மன்றின் கட்டளைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
“யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு அவருக்குப் பாதுகாப்பு இல்லாவிடின் மன்றிடம் விண்ணப்பம் செய்து மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.
“இனி எந்தவொரு தேவைக்காகவும் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தால் அதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்” என்று மனுதாரர்களது சட்டத்தரணி மன்றுரைத்தார்.
“மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய கடப்பாடு கீழ் நீதிமன்றங்களுக்கு உண்டு. அதனால் மனுதாரர்களது விண்ணப்பத்துக்கு இந்த மன்றினால் கட்டளை ஆக்க முடியாது.
அதனால் இந்தச் சாட்சியிடம் (பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ) சாட்சியம் பெறுவதை மேன்முறையீட்டு நீதிமன்றின் இறுதிக் கட்டளை கிடைக்கும் வரை ஒத்திவைக்கிறது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளை தொடர்பில் சாட்சியின் சட்டத்தரணி மன்றுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அடுத்த சாட்சியை அழைக்க மன்று கட்டளையிடுகிறது. அதன்படி டயலொக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தரவுகள் தொடர்பில் விளக்கமளிக்க அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
அத்துடன் வழக்கு விசாரணையை வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை ஒத்திவைத்து மன்று உத்தரவிட்டது.
58 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
59 minute ago
2 hours ago