Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
யாழ்ப்பாணம் - கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இரும்பக நிலைய உரிமையாளர் அண்மையில் வாள்வெட்டுக் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில், அவரது படுகொலையைக் கண்டித்து, இன்று (03), குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 06ஆம் திகதி மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டுக் குழுவொன்று இரும்பகத்திலுள்ள பொருள்களை நாசப்படுத்தியதுடன், மேற்படி இரும்பக நிலைய உரிமையாளர் மீதும் கடும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது.
தாக்குதலில் படுகாயமடைந்த 47 வயதான இரும்பக நிலைய உரிமையாளர் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார். அவரது இறுதிக் கிரியை நிகழ்வுகள் இன்று (03) நடைபெற்ற நிலையிலேயே, மேற்படி பகுதி வர்த்தகர்கள் குறித்த சம்பவத்துக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
1 hours ago
3 hours ago