Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2022 ஜனவரி 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
எதிர்வரும் காலத்தில் தான், இல்லாத இதர சிற்றுண்டிகள் உற்பத்தி செய்வதில் பாரிய எதிர் நிலை காணப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் என, யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்க ஊடகப் பேச்சாளர் கந்தசாமி குணரட்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்பொழுது வெதுப்பக உற்பத்தியில் கோதுமை மாவு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்படுவதால், உற்பத்தி பொருள்கள் குறைவடைந்துள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.
உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் எனவும் கூறினார்.
இதனால் தாங்கள் பல்வேறு இடர்களை எதிர்கொள்வதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர் என்றும், அவர் தெரிவித்தார்.
இதனால் எதிர்வரும் காலத்தில் தான், இல்லாத இதர சிற்றுண்டிகள் உற்பத்தி செய்வதில் பாரிய எதிர் நிலை காணப்படும் எனவும், கந்தசாமி குணரட்னம் தெரிவித்தார்.
"இலங்கை பூராகவும் 7, 250 வெதுப்பகங்கள் உள்ளன. அவற்றில் 3,000 வெதுப்பகங்கள் மட்டுமே தற்பொழுது இயங்கிக் கொண்டுள்ளன.
"அவற்றில் 1,500 பாரிய வெதுப்பகங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் பிரபலமான வெதுப்பகங்களுக்கு கோதுமை மா இல்லை. அவர்கள் தனியாரை நாடிய காரணத்தால் அவர்களுக்கு சங்கம் மூலம் கோதுமை மா விநியோகம் இடம்பெறுவதில்லை.
"வெதுப்பக உரிமையாளர்களின் தேவையை பிறிமா கம்பனுயால் தற்போது பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. 60 வீதமான கோதுமை மாவே தற்போது விநியோகிக்கப்படுகிறது" என்றார். இதனால், யாழ். மாவட்டத்தில் அதிகமான பாடசாலைகளுக்கு தற்போது சிற்றுண்டிகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது எனத் தெரிவித்த அவர், உற்பத்தி குறைவு கேள்வி அதிகரித்துள்ளது எனவும் கூறினார். யாழ். மாவட்டத்தில் இரண்டு சங்கங்களுக்கு, பிரிமா நிறுவனங்கள் கோதுமை மாவை விநியோகம் செய்கின்றன எனத் தெரிவித்த அவர், "கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம், மாவை எடுத்து குறைந்த விலையில் அங்கத்தவர்களுக்கு வழங்குகின்றது. 5,600 விற்பனை செய்யும் கோதுமை மா வெளியில் தற்போது 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது" எனவும் கூறினார். "முழுமையாக இந்த கோதுமை மாவு விநியோகம் சங்கத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. சாதாரணமாக சாதாரணமாக 600 மூடை கோதுமை மா விநியோகிக்கப்படும் நிலையில் அவற்றில் தற்போது மட்டுப்பாடுகள் நிலவுகின்றன. "சாதாரணமாக, சங்கத்துக்கு 3,000 மூடை மா விநியோகிக்கப்படும் நிலையில் தற்போது 300 மூட்டை குறைக்கப்படுகின்றது. இதனால் மாவை வெளியில் கொள்வனவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அவற்றின் தட்டுப்பாடு காணப்படுகின்றது. "அது பேக்கரி உரிமையாளர் சங்கம் ஊடாக கிடைக்கப்பெற்றால், அது பேக்கரி உரிமையாளருக்கு பயனாளிகளுக்கும் கிடைக்கப் பெற்ற வெற்றி. சில அங்கத்தவர்கள் வழங்கப்படும் கோதுமை மாவினை சேமித்து வைத்து தட்டுப்பாடான காலத்தில் நிவர்த்தி செய்துகொண்டு வருகின்றனர். "எதிர்வரும் காலத்தில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவும் பட்சத்தில், பாண் உற்பத்தியை தவிர இதர சிற்றுண்டிகளை உற்பத்தி செய்யமுடியாத நிலை காணப்படும். இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் எடுத்து கோதுமை உற்பத்தியை வழங்க முன்வர வேண்டும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025