2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காக்கைதீவு மீன்சந்தை அகற்றப்படவுள்ளது

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

காக்கைதீவு, இறங்குதுறைக்கு அண்மையில் அமைக்கப்பட்ட மீன் சந்தையை தவிர்த்து புதிய இடத்தில் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வருகின்ற சந்தையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

காக்கைதீவு மீனவர்களின் நலன்கருதி இறங்குதுறைக்கு அருகில், மீன் ஏல விற்பனை மண்டபமும் அதன் அருகில் மீன் சந்தையும் அமைக்கப்பட்டது. ஏல விற்பனை மண்டபம் பயன்படுத்தப்படுகின்ற போதும், மீன் சந்தையானது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு, பிறிதொரு இடத்தில் இயங்கியது.

அந்த சந்தையானது சுகாதாரச் சீர்கேடான முறையில் இருந்தது. அங்கு மீன்கள் நிலத்தில் வைத்து விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகளும் நுகர்வோரும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

இதனால், இந்தச் சந்தையானது ஒரு வார காலத்துக்குள் அகற்றி, உரிய கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதேச சபை செயலாளர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X