2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு வடமாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று திங்கட்கிழமை (25) யாழில் வைத்து உறுதியளித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவிலே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'சுண்ணக்கல் இங்கு அகழப்படாமல் சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதும், அதில் தனியார் துறைக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக இருந்தால் வடமாகாண முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என்றார்.

'மாகாண மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பூரண சம்மத அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே தொழிற்சாலை ஆரம்பிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும்.

மேலும், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனையிறவு உப்பளத்தில் இருந்து அடுத்த வருடம் 32 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்ய திட்டமிட்டு;ள்ளோம். பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு ஆனையிறவில் இருந்து உப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். காலப்போக்கில் ஓட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையையும் மீள ஆரம்பிக்கவுள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X