Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள 125 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 மாதங்களுக்குள் நலன்புரி முகாம் மக்களை மீள்குடியேற்றம் செய்வேன் எனக்கூறிய உறுதிமொழிக்கமைய இந்தக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.
இந்த 125 ஏக்கர் காணிகளுக்கும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி உட்பட 3 கிராமஅலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
அண்மையில் விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் காணிகளின் காணிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும், அத்தினத்தில் வைத்து 125 ஏக்கர்களும் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago