2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கொடிகாமம் பகுதியில் இருவருக்கு வாள்வெட்டு

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

“திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மந்துவில் பகுதியினை சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் (வயது 24), மற்றும் அதே பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோபர் தினேஷ் (வயது 28) ஆகிய இருவருமே வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்” என, பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனிப்பட்ட பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 11 பேர் தொடர்புபட்டிருந்ததாக காயமடைந்தவர்கள், கொடிகாமம் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X