2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காட்டுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

கிளாலி, சபரிபுரம் தோட்டப் பகுதி காட்டுக்குள் கடந்த 12ஆம் திகதி சென்ற நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளாலியைச் சேர்ந்த பத்திநாதன் சுதாகரன் (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெடிபொருட்கள் அபாயமுள்ள மேற்படி பகுதியில் இன்னமும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மேற்படி நபர் குறித்தப் பகுதிக்குள் சென்றுள்ளார். இவரைக் காணவில்லையென அவரது மனைவி கடந்த 13ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு தேடுதல் பணியில் களமிறங்கியிருந்த பொலிஸார் அவருடைய சடலத்தை மீட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் காணப்பட்ட வெடிபொருட்களை எடுப்பதற்காக இவர் அப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்றும் அவ்வாறு செல்கையில், வெடிபொருள் வெடித்து அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X