2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

காணிகளுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் வழங்கல்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில்இ விடுவிக்கப்பட்ட 8 பேருடைய காணிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் இன்று வெள்ளிக்கிழமை (02) கிளிநொச்சி மாவட்டச் செயலரால் காணி உரிமையாளர்களிடம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்குமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் காரணமாக கடந்த 17ஆம் திகதி 4.5 ஏக்கர் காணிகளும், கடந்த 31 ஆம் திகதி 3.5 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான கடிதங்களே இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, மிகுதி காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 3 ஆவது நாளாகவும் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X