Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
'காணாமற்போனோரில் பலர் கொல்லப்பட்டுவிட்டதாகக் கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, காணாமற்போன ஏனையோர் பற்றிய விவரங்களும் தெரிந்திருக்கும். முழுவிடயங்களையும் தெரிந்த அவர், அதனை வெளிப்படுத்த வேண்டும்' என, காணாமற்போனோரின் உறவினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே உறவினர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,
பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த பிரதமர், காணாமற்போனோரில் பலர் கொல்லப்பட்டுவிட்டதாக கூறினார். அவ்வாறாயின் அவர்களை கொலை செய்தது யார் என்பதனை பிரதமர் அன்றைய தினமே வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
கொல்லப்பட்டவர்களின் விவரம் தெரிந்தால், ஏனையோர் பற்றிய தகவல்களும் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனை அவர் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
இதேவேளை,ஜே.வி.பி கலவரத்தின் போது காணாமற்போனோர் தொடர்பிலும் கண்டறிவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம உரிமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago