2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கைதிகள் தினத்தில் யாழில் போராட்டம்

George   / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சர்வதேச கைதிகள் தினத்தையொட்டி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்,  திங்கட்கிழமை (12) யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

“உண்ணாவிரதத்தின் போது அள்ளியிறைக்கபட்ட அரசின் வாக்குறுதிகள் அர்த்தமற்றுப் போனது ஏன்?”, “உள்நாட்டு ஆயதக் கிளர்ச்சி செய்த ஜே.வி.பிக்கு இரண்டு தடவைகள் பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்க முடியாதது ஏன்?”, “நல்லாட்சி அரசிலும் இன பேதமா?” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் இப்போராட்டத்தின் போது விநியோகிக்கப்பட்டன.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ்.கஜேந்திரன், வலி. வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் எஸ்.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X