2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கோப்பாய் சந்தியில் தன்னியக்க வீதிச்சமிஞ்கை பொருத்த நடவடிக்கை

Niroshini   / 2016 மே 29 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதான வீதியின் கோப்பாய் சந்தியில் தன்னியக்க வீதிச் சமிஞ்கை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்பாய் சந்தியில் வீதி விபத்துக்களினால் கடந்த வருடம் பலர் உயிரிழந்திருந்தனர். இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலகம் குறித்த பகுதியில் வீதி சமிஞ்கையினை பொருத்தி தருமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரியிருந்தது. இதற்கமைவாக, கோப்பாய் சந்தியில் வெகுவிரைவில் தன்னியக்க வீதிச்சமிஞ்கையினை பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதடி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள்;, மானிப்பாய் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கோப்பாய் சந்தியினை அண்மிக்கும் போது, அப் பகுதியில் நாற்சந்தி இருப்பதற்கான தெளிவின்மை காணப்படுகிறது.

இதனால், அப் பகுதியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெறுகின்றது. இதனை கருத்திற்கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தன்னியக்க வீதிச்சமிஞ்கையினை பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X