2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கிராஞ்சியில் ஒரு குடும்பம் மாத்திரம் உண்ணாவிரதம்

Gavitha   / 2016 மார்ச் 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி இலவன்குளம் பகுதியில் ஒரு குடும்பம் செவ்வாய்க்கிழமை (15) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தாம் தொழில் செய்யும் பகுதியில் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளமையால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பண்ணையை அகற்றி தாம் தொழிலை முன்னெடுத்து செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் பேராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளுடன் தாய், தந்தை ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், தங்களுக்கான நீதி கிடைக்கும் வரை இந்த இதனை கைவிடப்போவதில்லை என்று அவர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கடலட்டை வளர்ப்புக்கு கடற்றொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடலட்டை வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு நீரியல் வள திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X