2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கீரிமலை கேணியில் முழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Kogilavani   / 2016 நவம்பர் 14 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கீரிமலை கேணியில் குளித்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலு சுபாஸ்கரன் வயது(38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உறவினர் ஒருவரின் அந்தியெட்டி கிரியைகள் செய்வற்காக சென்ற மேற்படி நபர், கேணியில் நீராடச்சென்றிருந்தார்.

குறித்த நபர் நீரில் மூழ்குவதை அவதானித்தவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், அவர்; ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X