2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கூரையின் மேல் பொருட்கள் ஏற்றமுடியாது

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபடும் பாரவூர்திகளின் (லொறி) கூரைப் பகுதிக்கு மேல் பொருட்கள் ஏற்றப்படுவதை தடை செய்யும் தீர்மானம், யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், வீரசிங்கம் மண்டபத்தில், தலைவர் செ.ஜெயக்குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.

பாரவூர்திகளின் கூரையின் மேல் பொருட்களை ஏற்றுவதால், பாரவூர்தி சேதமடைவதுடன், பொருட்களும் அழிவடைகின்றன. மேலும், உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன. ஒரு பாரவூர்தியில் அதிகப்படியான பொருட்கள் ஏற்றப்படுவதால், சங்கத்திலுள்ள அனைத்து பாரவூர்திகளுக்கும் தொழில் செய்ய முடியாதுள்ளது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகத்திடமும் இது தொடர்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், வட மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகவும் வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் பொ.கணேஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X