2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் அபிவிருத்தி குழுக்கூட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச செயலகத்துக்குட்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி விடயங்களை ஆராய்வதற்கான முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்று காலை கிளிநொச்சியில் ஆரம்பமானது.

மாவட்ட அபிவிருத்தியின் இணைத்தலைவர்களான, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன் மற்றும்  அங்கயன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இக் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரைச்சியின் 42 கிராம அலுவலர் பிரிவுகளில் 2016ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில், வீதிகள் உட்கட்டுமான அமைப்புக்கள், சிறிய குளங்கள், விவசாய பாதைகள் கல்வி, சுகாதாரம் சம்மந்தமான விடயங்கள், மீளக்குடியமர்வு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதோடு கிளிநொச்சியில் தனியார் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதில், வட மாகாணசபையின் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும்  உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை மற்றும் ப.அரியரத்தினம், கரைச்சிப்பிரதேச செயலாளர்  கோ.நாகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அரச சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டமானது, கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் கிளிநொச்சியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X