Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கடந்த நாட்களில் பெய்த கடும்மழை காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 7 நீர்ப்பாசன குளங்கள் வான் பாய்ந்து வருவதாக கிளிநொச்சி நீர்ப்பாசன பொறியியலாளர் ஜி.செந்தூரன் தெரிவித்தார்.
25 அடி கொள்ளளவு கொண்ட அக்கராயன் குளத்தில், 5.5 அங்குலம் அளவும் 10 அடி கொள்ளளவுள்ள கரியாலை நாகபடுவன் குளம் 1 அடி 3 அங்குலம் அளவும், 10 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள குடமுறுட்டி குளம் 2 அங்குலம் அளவும், 9 அடி 6 அங்குலம் கொள்ளளவுள்ள வன்னேரிக்குளம் 2 அங்குலம் அளவும், 19 அடி கொள்ளளவுள்ள புதுமுறிப்புக் குளம் 3 அங்குலம் அளவும், 12 அடி கொள்ளளவுள்ள பிரமந்தனாறு குளம் 6 அங்குலம் அளவும், 24 அடி கொள்ளளவுள்ள கல்மடுக்குளம் 5 அங்குலம் அளவுக்கும் வான் பாய்கின்றது.
34 அடி கொள்ளளவு கொண்ட கிளிநொச்சியின் பாரிய நீர்ப்பாசனக் குளமாகிய இரணைமடுக் குளம் 30 அடி 2 அங்குலம் அளவில் நீரைக்கொண்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (10) காலை 7 மணிவரையில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago