2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கிவிட்டு நகைகள் மற்றும் கணினி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை  திங்கட்கிழமை (21) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

2014ஆம் ஆண்டு இந்தச் சந்தேகநபர் தலைமையில் சென்ற குழுவினர் வீட்டு உரிமையாளரைத் தாக்கியுள்ளதுடன் அவரைக் கட்டி வைத்து 3 மணித்தியாலங்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அயல்வீட்டுக்காரர்கள், சம்பவத்தை அறிந்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதும் பொலிஸார் அங்கு வந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கைவிட்டுவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த நபரை கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X