2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கொள்ளை, வாள்வெட்டைப் பற்றிக் கதைக்காத பொலிஸார்

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்பில், செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற சிவில் சமூகக் கூட்டத்தின்போது, பொலிஸார் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) இக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது, யாழ்;ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வழக்குப் பதிவுகளின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டனர்.

ஆனால், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் மாலை 6 மணிக்கு பின்னர் வீடுகளில் முடங்க வேண்டியுள்ளதாகவும், முடங்கினாலும் இரவில் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத நிலை இருப்பதாக மாவட்டச் செயலர் மிகவும் காட்டமாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X