2025 மே 19, திங்கட்கிழமை

சகோதரர் கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 30 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக அண்ணன், தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்துள்ளதுடன், தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்று (29) இரவு அண்ணன் தம்பிக்கு இடையில் பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில், அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X