2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி

George   / 2016 நவம்பர் 06 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரநடுகை மாதத்ததை முன்னிட்டு, வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி சனிக்கிழமை (05) ஆரம்பமாகியது.

பொதுமக்களுக்கு தரமான மரக்கன்றுகளைப் பெற்றக்கொடுத்தல்,  உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் ஆகிய நோக்கத்தில் இம்;மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்திப் பண்ணையாளர்கள் 14 காட்சிக் கூடங்களை அமைத்துள்ளனர்.

ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்து கொண்டிருந்தார். விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், அனந்தி சசிதரன், விவசாய அமைச்சின்; செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் திணைக்களத் தலைவர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.  

எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த மலர்க்கண்காட்சி நடைபெறும். கண்காட்சியைப் பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X