Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
சட்ட விரோத மரக்கடத்தல், மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
தனங்களப்பு பகுதியில் இருந்து நுணாவில் பகுதிக்கு 4 உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
பொலிஸாரை கண்டதும் மணல் கடத்தில் ஈடுபட்ட நபர்கள் உழவு இயந்திரங்களை வீதியில் கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை அடுத்து பொலிஸார் குறித்த உழவு இயந்திரங்களை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தப்பிச்சென்ற நபர்களை கைது செய்வதுக்கு நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மற்றும் மணல் ஆகியவற்றை நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் பாரவூர்தி ஆகியவற்றையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
14 minute ago
40 minute ago